ஒரு வருட தடை: கேள்விக்குறியாகும் ஸ்மித் மற்றும் வார்னரின் எதிர்காலம்

Report Print Athavan in கிரிக்கெட்

பந்தை சேதப்படுத்த திட்டம் போட்டுக்கொடுத்த ஸ்மித், வார்னருக்கு ஒரு ஆண்டு எவ்வித கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்க கூடாது என கிரிக்கெட் ஆஸ்திரேலிய குழு தடை விதித்துள்ளது.

ஆனால், உண்மையில் களத்தில் பந்தை மஞ்சள் டேப்பால் சேதப்படுத்திய பேன்கிராப்ட்டுக்கு 9 மாதங்கள் தடைவிதித்துள்ளது.

பயிற்சியாளர் லீமேன் குறித்து எவ்வித தகவலும் கிரிக்கெட் ஆஸ்திரேலிய தெரிவிக்கவில்லை.

இந்த தடைவிதிக்கப்பட்டதால் இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ஐபிஎல்., போட்டிகளிலும் வார்னர் ஸ்மித் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஸ்மித் வார்னரின் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டதால் அவர்களின் ஸ்பான்சர்களும் பின் வாங்க துவங்கியுள்ளனர். இதனால் பொருளாதார ரீதியாகவும் இவர்கள் பின்னடைவை சந்தித்துள்ளனர்.

குறித்த டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட விரும்பத்தகாத மோசமான சம்பவங்களுக்காக கிரிக்கெட் ரசிகர்களிடம் மன்னிப்பு கோருவதாக அவுஸ்திரேலியாவின் தலைமை செயல் அதிகாரி James Sutherlandஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers