தனது ஸ்பான்சரை இழந்த டேவிட் வார்னர்: காரணம் இதுதான்

Report Print Kabilan in கிரிக்கெட்

பந்தை சேதப்படுத்திய சர்ச்சையின் பின்னணியில் இருந்ததால், டேவிட் வார்னரை sponsor செய்ய மாட்டோம் என L.G.Australia நிறுவனம் தெரிவித்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், அவுஸ்திரேலிய வீரர்கள் பந்தை சேதப்படுத்திய விவகாரம் அவுஸ்திரேலிய மக்கள், ஊடகங்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும், இந்த விடயம் கிரிக்கெட் அவுஸ்திரேலியாவுக்கு Sponsor நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், L.G.Australia நிறுவனம் டேவிட் வார்னருடனான Sponsorship-யை தொடர வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளது. மேலும், இது தொடர்பாக அந்நிறுவனம் கூறுகையில்,

‘டேவிட் வார்னருடனான L.G-யின் Sponsorship அதன் இறுதி வாரங்களில் உள்ளது. சமீபத்திய சம்பவங்களைத் தொடர்ந்து, அவருடனான ஒப்பந்தத்தை நீட்டிக்க விரும்பவில்லை.

L.G.Australia எப்போதும், எங்களது முக்கிய மதிப்பீடுகளை பகிர்ந்து கொள்ளும் தூதர்களுடன் மட்டுமே பணியாற்ற விரும்புகிறது. இந்த Sponsor உறவுகளை நாங்கள் மிகவும் பொறுப்புடன் அணுகுகிறோம்’ என தெரிவித்துள்ளது.

வார்னருக்கு கேரி நிகோல்ஸ், ஆசிக்ஸ் போன்ற நிறுவனங்களும் Sponsors ஆக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers