டோனியை நான் வெல்வேன்: உண்மையை சொன்ன சென்னை அணி வீரர்

Report Print Raju Raju in கிரிக்கெட்

சில நேரங்களில் டோனி வெல்வார், சில நேரங்களில் நான் வெல்வேன் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் டுவைன் பிராவோ கூறியுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா ஏப்ரல் 7-ம் திகதி தொடங்கவுள்ள நிலையில் முதல் போட்டியில் சென்னை அணி மும்பையை எதிர்கொள்ள உள்ளது.

இது குறித்து சென்னை அணியின் நட்சத்திர வீரர் பிராவோ கூறுகையில், சென்னை அணிக்கு டோனி போட்டியை முடித்து வைக்கும் முக்கிய வீரராக திகழ்கிறார்.

அணி சார்பாக கடைசி ஓவரை வீச பெரும்பாலும் என்னை தான் டோனி தெரிவு செய்வார்.

அதனால் நாங்கள் வலை பயிற்சி செய்யும் போது டோனிக்கு கடைசி ஓவரை எப்படி வீசுவேனோ அதை மனதில் வைத்துக் கொண்டு தான் வீசுவேன்.

இதில் சில நேரங்களில் டோனி வெல்வார். சில நேரங்களில் நான் வெல்வேன் என கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers