ரபாடா ஒன்றும் எந்திரம் அல்ல: கொந்தளித்த டூபிளிசிஸ்

Report Print Kabilan in கிரிக்கெட்
307Shares
307Shares
lankasrimarket.com

தென் ஆப்பிரிக்க வீரர் ரபாடாவுக்கு தடை விதிக்கப்பட்டது போல், டேவிட் வார்னருக்கு ஏன் தடை விதிக்கப்படவில்லை என தென் ஆப்பிரிக்க அணித்தலைவர் டூபிளிசிஸ் ஆவேசமாக தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்கா - அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையே டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரில், தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபாடாவின் மோசமான நடவடிக்கைகள் காரணமாக, அவருக்கு தகுதியிழப்புப் புள்ளிகளுடன் கூடுதல் புள்ளிகள் சேர்ந்தது.

இதனால் அவருக்கு 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ரபாடா மீதான தடை குறித்து தென் ஆப்பிரிக்க அணித்தலைவர் டூபிளிசிஸ் கூறுகையில்,

‘கிரிக்கெட் உணர்ச்சிகரப் பக்கத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம் என நினைக்கிறேன். ஒவ்வொரு சம்பவமும் காமிராவில் பதிவாகிறது.

கேகிஸோ ரபாடா ஓடி வந்து 15 ஓவர்கள் வீசுகிறார். அவுட் ஆக்க கடுமையாக முயற்சி செய்கிறார். அதில் அவர் வெற்றியடையும் போது, அவர் உணர்வை வெளிப்படுத்தவே செய்வார். இல்லையெனில் எதற்கு மனிதர்கள் கிரிக்கெட் ஆட வேண்டும்.

ரபாடாவுக்குப் பதில் பந்துவீச்சு எந்திரத்தையும், துடுப்பாட்ட வீரருக்குப் பதில் ரோபோவையும் ஆட வைக்கலாமே. ரபாடாவுக்கு எதிரான புகார் Level 2 ஆகும். இதற்கு 3 தகுதியிழப்புப் புள்ளிகள். அவர் ஸ்மித் சட்டையை உரசினார்.

ஆனால், வார்னர் விவகாரம் இன்னும் மோசமானது. ரபாடா, ஸ்மித் உடல் தொடர்பு மிக குறைந்தபட்சமாகும். ஆனால், வார்னர் விவகாரம் இப்படியல்ல. இந்த இரண்டையும் ஏன் ஒரே விதமான விதிமீறலாகப் பார்க்க வேண்டும்.

மேலும், ஒரு முக்கிய தொடரின் சூழலையும் அதிகாரிகள் கவனிக்க வேண்டும். இரண்டு சிறந்த அணிகள் மோதுகின்றன. சிறந்த வீரர்கள் விளையாடுவது உறுதி செய்யப்பட வேண்டும்.

அவர்கள் இது உடல் ரீதியான மோதல் என்கிறார்கள். ஆனால், இது வெறும் சட்டை உரசல்தான். மேலும் இது வேண்டுமென்றே செய்யப்பட்டதல்ல. ஆட்ட நடுவர் கூறுவது போல், இதைவிடவும் பெரிய விடயம் இங்கு நடந்து வருகிறது.

பெரிய தொடர் என்பதால் டேவிட் வார்னர் Level 3 நடத்தை மீறல் என்றாலும் தடை செய்யப்படவில்லை. அதுதான் ஏன் என்று கேட்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

AAP

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்