வங்கதேசத்தை மிரட்டிய தமிழனுக்கு குவியும் பாராட்டு: ஹார்திக் பாண்ட்யாவோடு ஒப்பிட்டு பேச்சு

Report Print Santhan in கிரிக்கெட்

வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக செயல்பட்ட விஜய் சங்கர் என்னை ஹார்திக் பாண்ட்யாவோடு ஒப்பிட்டு பேச வேண்டாம் என்று கூறியுள்ளார்.

இலங்கையில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இப்போட்டியில் இந்திய அணியின் பீல்டிங் மிக மோசமாக இருந்தது. இருப்பினும் போட்டியில் வெற்றி பெற்றது.

குறிப்பாக இந்த போட்டியில் ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டவர் விஜய் சங்கர். தமிழகத்தைச் சேர்ந்தவரான இவர்சர்வதேச அரங்கில் முதலாவது விக்கெட்டையும் வீழ்த்தினார்.

அதுமட்டுமின்றி சுரேஷ் ரெய்னாவும், வாஷிங்டன் சுந்தர் ஆகிய இந்திய அணி வீரர்கள் சில கேட்சுகளை தவறவிட்டனர். அப்படி அந்த கேட்சுகள் பிடிக்கப்பட்டிருந்தால் விஜய் சங்கர் 4 விக்கெட்டுகள் வீழ்த்தியிருப்பார்.

இந்நிலையில் இது குறித்து அவர் கூறுகையில், என்னைப் பொறுத்தவரை விளையாட்டிற்கு எது முக்கியமோ அதைப் கற்றுக்கொண்டு ஒவ்வொரு நாளும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

இப்போட்டியில் 2 கேட்சுகளை வீரர்கள் தவறவிட்டனர். இது ஒன்றும் வருத்தமாக இல்லை. விளையாட்டில் இதுபோன்று கேட்சுகளை தவறவிடுவது இயல்பானது. இதை பெரிதுபடுத்தக்கூடாது. இது எந்தவிதத்திலும் என்னை பாதிக்காது.

அதேசமயம், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நான் எடுத்த முதல் விக்கெட்டை நான் மிகவும் நேசிக்கிறேன். ஆனால், பீல்டர்களைப் பொருத்தவரை மின்னொளியில் இருந்து கொண்டு வெள்ளைநிற பந்தை பீல்டிங் செய்துவது மிகவும் கடினமான செயலாகும்.

மேலும் என்னை ஹார்திக் பாண்ட்யாவோடு ஒப்பிட்டு பேச வேண்டாம் எனவும், அது தனக்கு மிகுந்த நெருக்கடியை ஏற்படுத்தும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் விஜய்சங்கரின் ஆட்டத்தைப் பார்த்து பலரும் சமூகவலைத்தளங்களில் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

27 வயதான விஜய்சங்கர் திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers