டோனி, கோஹ்லியை விட அதிக லாபம் பெற்ற ஷிகர் தவான்

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்திய துடுப்பாட்ட வீரர் ஷிகர் தவான் ஊதியம், புதிய ஊதிய ஒப்பந்தத்தின் மூலமாக பல படிகள் உயர்ந்துள்ளது.

பி.சி.சி.ஐ புதிய ஊதிய ஒப்பந்தத்திற்கான பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது. அந்த பட்டியலில், அதிரடி ஆட்டக்காரர் ஷிகர் தவான் ‘C’ தரநிலையில் இருந்து, ‘A+' தரநிலைக்கு உயர்ந்துள்ளார்.

இதன்மூலம் அவரின் ஆண்டு ஊதியம் 7 கோடியாக உயர்ந்துள்ளது. இதற்கு முன்பு அவர் ‘C' தரநிலையில் இருந்த போது, தவானின் ஆண்டு ஊதியம் 50 லட்சமாக இருந்தது.

ஆனால், தற்போது அவரின் மாத ஊதியமே 58 லட்சங்களாக அதிகரித்துள்ளது. முன்னணி வீரர்களான கோஹ்லி மற்றும் டோனியின் ஆண்டு ஊதியம் முறையே 7 கோடி மற்றும் 5 கோடி ஆகும்.

எனினும், ஷிகர் தவான் தரநிலை அவர்களை விட 1300 சதவித அளவில் உயர்ந்துள்ளது. டோனியின் தரநிலை ‘A+'-யில் இருந்து ‘A' நிலைக்கு இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

PTI

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers