இலங்கைக்கு எதிரான தவறை யோசித்தோம்: வெற்றிக்கு பின்னர் இந்திய அணித்தலைவர்

Report Print Raju Raju in கிரிக்கெட்

இலங்கை அணிக்கு எதிரான முதல் போட்டியில் செய்த தவறை யோசித்து களமிறங்கியதே, வங்கதேசத்தை இரண்டாவது போட்டியில் ஜெயிக்க காரணம் என ரோகித் சர்மா கூறியுள்ளார்.

இலங்கையில் நடைபெற்று வரும் டி20 முத்தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி இலங்கையிடம் தோற்றது.

இந்நிலையில் நேற்று வங்கதேசத்துடன் இரண்டாவது ஆட்டத்தில் விளையாடிய இந்தியா 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வெற்றிக்கு பின்னர் பேசிய இந்திய அணித் தலைவர் ரோகித் சர்மா, இலங்கைக்கு எதிரான முதல் போட்டியில் நாங்கள் செய்த தவறுகளை யோசித்தே இப்போட்டியில் களமிறங்கினோம்.

வீரர்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட்டனர், ஆனாலும் சில கேட்சுகளை தவறவிட்டதால் பீல்டிங்கில் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டியுள்ளது என கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers