கேதார் ஜாதவ் கிரிக்கெட் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கும் டோனி: எப்படி தெரியுமா?

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான கேதர் ஜாதவ் டோனி தன் கிரிக்கெட் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்திய அணியில் தற்போது சுழற்சி முறையில் வீரர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். அப்படி தேர்வு செய்யப்படும் வீரர்களும் தங்களுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியில் கெட்டியாக ஒட்டிக் கொள்கின்றனர்.

அந்த வகையில் இந்திய அணிக்கு கிடைத்த மிடில் ஆர்டர் துடுப்பாட்ட வீரர் கீதர் ஜாதவ். ஒரு சில போட்டிகளில் அற்புதமான துடுப்பாட்டம், முக்கியமான நேரங்களில் விக்கெட்டுகள் என வீழ்த்திய அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவியுள்ளார்.

இந்நிலையில் இந்த வருடத்திற்கான ஐபிஎல் போட்டியில், சென்னை அணிக்காக கீதர் ஜாதவ் வாங்கப்பட்டுள்ளார்.

அப்போது டோனி குறித்து அவரிடம் கேட்ட போது, இந்திய கிரிக்கெட் அணியில் பகுதி நேர பந்துவீச்சாளாரக என்னை அறிமுகம் செய்ததே டோனி தான், சொல்லப் போனால் அவர் மூலம் தான் பந்து எப்படி வீச வேண்டு என்ற சில டிப்சுகளே எனக்கு கிடைத்தது.

ஐபிஎல் சீசனில் டோனி தலைமையிலான சென்னை அணியில் இடம் பெற்றுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. என் முழு திறமையையும் வெளிப்படுத்துவதோடு, என் பந்து வீச்சு திறனை மேம்படுத்த டோனி மிக உதவியாக இருப்பார் என்று நம்புகிறேன்.

டோனியின் கீழ் விளையாடுவது என் நம்பிக்கையை அதிகரிப்பதோடு இக்கட்டாண சூழலில் துடுப்பாட்டம், பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட மேம்படுத்திக் கொள்ள முடியும். அதுமட்டுமின்றி டோனி என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers