பிசிசிஜக்கு எதிராக கொதித்தெழுந்த டோனி ரசிகர்கள்: காரணம் என்ன?

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள வீரர்களுக்கான ஊதிய ஒப்பந்தத்தில், டோனிக்கு 'A' Grade அளித்ததுள்ளது அவரது ரசிகர்களை வெறுப்படையச் செய்துள்ளது.

இந்திய கிரிக்கெட் வாரியம், வீரர்களுக்கான ஊதிய ஒப்பந்தத்தை அறிவித்துள்ளது. A+, A, B, C என்ற தரநிலையில் வீரர்களுக்கு ஊதியம் அளிக்கப்படுகிறது.

இதில் ‘A+’ grade வீரர்களுக்கு 7 கோடியும், ’A’ grade வீரர்களுக்கு 5 கோடியும், ’B’ grade வீரர்களுக்கு 3 கோடியும், ’C’ grade வீரர்களுக்கு 1 கோடியும் ஊதியமாக வழங்கப்படுகிறது.

இந்நிலையில், ‘A+' grade தரநிலையில் இருந்த விக்கெட் கீப்பர் டோனி, ‘A' grade தரநிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இதனால், டோனியின் ரசிகர்கள் தங்களது கண்டனத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

’டோனிக்கு சம்பளம் எல்லாம் பெரிய விடயமல்ல, ஆனால், மூத்த வீரர் என்ற மரியாதை உள்ளது. இந்திய அணிக்கு டோனி சிறப்பான பங்கை அளித்து வருகிறார், அவரது ஃபார்மிலும் எந்த குறையும் இல்லை.

களத்தில் 6வது மற்றும் 7வது துடுப்பாட்ட வீரராக இறங்கி, ஆட்டத்தின் போக்கை மாற்றக் கூடியவர் டோனி.

மேலும், கீப்பிங்கிலும் தொடர்ந்து அசத்தி வரும் டோனியை, 'A' வீரராக பிசிசிஐ எவ்வாறு அறிவிக்கலாம்’ என ரசிகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers