ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்ட பிரபல வீரர்

Report Print Kabilan in கிரிக்கெட்

டர்பன் டெஸ்டில் டிவில்லியர்ஸை ரன் அவுட் ஆக்கிய நாதன் லயன், அவரை நோக்கி பந்தை வீசி ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

தென் ஆப்பிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் விளையாடும் முதல் டெஸ்ட் போட்டி, தென் ஆப்பிரிக்காவின் டர்பனில் நடைபெற்றது.

இந்த டெஸ்டின் 4வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது, அவுஸ்திரேலியா நிர்ணயித்த 417 வெற்றி இலக்கை நோக்கி, தென் ஆப்பிரிக்கா அணி துடுப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தது.

ஆட்டத்தின் 12வது ஓவரை நாதன் லயன் வீச, மார்கிராம் எதிர்கொண்டார். அந்த ஓவரின் கடைசி பந்தை மார்கிராம் லெக் சைடு திசையில் அடித்தார்.

வார்னர் கைக்கு அந்த பந்து சென்றது, அப்போது ரன் எடுக்க டி வில்லியர்ஸ் ஓடிய போது, மறுமுனையில் இருந்த மார்கிராம் ஓடி வரவில்லை. இதனால், கிரீசுக்கு டி வில்லியர்ஸ் திரும்பிய போது லயனின் கைக்கு பந்து வந்தது.

உடனே லயன், டி வில்லியர்ஸை ரன் அவுட் செய்தார். ஆனால், அதன் பிறகும் தனது கையில் இருந்த பந்தை டி வில்லியர்ஸை நோக்கி எறிந்துள்ளார்.

டி வில்லியர்ஸின் வயிற்றுப் பகுதிக்கு அருகில் பந்து பலமாக தாக்கியது. இதனைத் தொடர்ந்து, நாதன் லயனின் நடவடிக்கையை ஆய்வு செய்த நடுவர், வீரர்களின் நன்னடத்தையில் இது முதல் நிலை குற்றம் என அறிவித்தார்.

மேலும், லயனின் இந்த செயலுக்காக அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்