நாளைய டி20 போட்டியில் இலங்கை அணிக்கு புதிய ஜெர்சி: வைரலாகும் புகைப்படம்

Report Print Raju Raju in கிரிக்கெட்

இலங்கையில் நாளை தொடங்கும் முத்தொடர் போட்டியின் முதல் ஆட்டத்தில் இலங்கை அணி வீரர்கள் புது விதமான ஜெர்சியை அணியவுள்ளனர்.

இலங்கை, இந்தியா, வங்கதேச அணிகள் மோதும் சுதந்தர கிண்ண டி20 முத்தொடர் நாளை கொழும்புவில் தொடங்கவுள்ளது.

நாளை நடைபெறவுள்ள முதல் போட்டியில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இந்த போட்டியில் புதிய ஜெர்சியை இலங்கை வீரர்கள் அணியவுள்ளனர்.

இலங்கையின் 70வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் இந்த போட்டித் தொடருக்கான இலங்கை அணியின் ஜெர்சியில் தேசியக் கொடியில் காணப்படும் நிறங்கள் மற்றும் வால் ஏந்திய சிங்கம் போன்ற அம்சங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்