வேகப்பந்து வீச்சில் தாக்குதலுக்கு ஆளான வீரர்: பரபரப்பான மைதானம்

Report Print Kabilan in கிரிக்கெட்

அவுஸ்திரேலியாவில் நடந்த உள்ளூர் கிரிக்கெட் போட்டியில், வேகப்பந்து வீச்சாளர் அப்போட்டின் பந்துவீச்சில் துடுப்பாட்ட வீரர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவுஸ்திரேலியாவில், ‘ஷெபீல்டு ஷீல்டு’ கிண்ணத்திற்கான முதல் தரப் போட்டி நடந்து வருகிறது. இதில் நியூ சவுத் வேல்ஸ் அணியும், விக்டோரியா அணியும் மோதின.

சவுத் வேல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அப்போட் பந்துவீசியுள்ளார். இவரின் பந்துவீச்சை எதிர்கொண்ட, விக்டோரியா அணியின் துடுப்பாட்ட வீரர் புகோவ்ஸ்கியின் ஹெல்மெட்டில் வேகமாகத் தாக்கியது.

இதனால் நிலைகுலைந்த புகோவ்ஸ்கி சரிந்து விழுந்தார். இதனைத் தொடர்ந்து, உடனடியாக மற்ற வீரர்களும், நடுவர்களும் அவரை தூக்க வந்தனர். அதன் பின்னர், பிசியோதெரபிஸ்ட் வரவழைக்கப்பட்டு புகோவ்ஸ்கிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனால், அவரால் நடக்க முடியாததால் மைதானத்தில் இருந்து வெளியேறினார். அவருக்கு பரிசோதனை செய்யப்பட இருக்கிறது. இதனால் மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த 2014ஆம் ஆண்டு நடந்த போட்டி ஒன்றில், அப்போட் வீசிய பந்து தாக்கியதில் பிலிப் ஹக்ஸ் என்ற துடுப்பாட்ட வீரர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்