புதிய மைல்கல்லை எட்டிய அவுஸ்திரேலிய அணித்தலைவர்

Report Print Kabilan in கிரிக்கெட்

அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித், சர்வதேச கிரிக்கெட்டில் 10,000 ஓட்டங்களை குவித்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி, டர்பனில் நடந்து வருகிறது.

முதல் இன்னிங்ஸில் அவுஸ்திரேலியா 351 ஓட்டங்களும், தென்னாப்பிரிக்கா 162 ஓட்டங்களும் எடுத்தன. பின்னர், தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய அவுஸ்திரேலிய அணி 9 விக்கெட் இழப்புக்கு 219 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

இந்தப் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித், 25வது ஓட்டத்தை எட்டியபோது சர்வதேச கிரிக்கெட்டில் 10,000 ஓட்டங்களை கடந்தார். 62 டெஸ்டில் 6151 ஓட்டங்களும், 108 ஒருநாள் போட்டியில் 3431 ஓட்டங்களும் மற்றும் 30 டி20 போட்டியில் 431 ஓட்டங்களும் என மொத்தமாக 10,013 ஓட்டங்கள் குவித்துள்ளார் ஸ்மித்.

இதன் மூலமாக, இந்த மைல்கல்லை அடைந்த 13வது அவுஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை ஸ்டீவ் ஸ்மித் பெற்றுள்ளார்.

AFP

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்