மீண்டும் அணியில் இணைவாரா மலிங்கா? தெரிவு குழு தலைவர் முக்கிய தகவல்

Report Print Raju Raju in கிரிக்கெட்

இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா அணியில் மீண்டும் சேர்க்கப்படுவது குறித்து தெரிவு குழு தலைவர் கிரஹாம் லெப்ரோய் பேட்டி அளித்துள்ளார்.

இலங்கை அணியில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வரும் மலிங்கா சமீபத்தில் அறிவிக்கப்பட்ட சுதந்திர கிண்ண முத்தொடருக்கான அணியிலும் சேர்க்கப்படவில்லை.

அவர் அணியில் சேர்க்கப்படாதது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது.

இது குறித்து இலங்கை அணி தெரிவு குழு தலைவர் கிரஹாம் லெப்ரோய் கூறுகையில், 2019-ல் நடைபெறவுள்ள உலகக்கிண்ணத்துக்கான எமது திட்டத்தில் மலிங்கா நிச்சயமாக இருக்கிறார்.

அதற்காக அவர் நிறைய போட்டிகளில் விளையாட வேண்டும்.

இப்போது நடைபெற்று வரும் டி20 உள்ளூர் போட்டித் தொடரில் அவர் விளையாட வேண்டும்.

பின்னர் நடைபெறவுள்ள ஒருநாள் தொடர்களில் மலிங்கா இணைத்துக் கொள்ளப்படுவார் என கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்