இலங்கை அணியிடம் வாங்கிய அடி: ஓய்வு பெற்ற வீரரை அழைக்கும் வங்கதேசம்

Report Print Santhan in கிரிக்கெட்

சர்வதேச டி20 தொடரிலிருந்து ஓய்வு பெற்ற மஷ்ரபே மோர்டசாவை வங்கதேச கிரிக்கெட் வாரியம் மீண்டும் டி20 தொடரில் விளையாட அழைக்கிறது.

வங்கதேச அணி சமீபத்தில் நடைபெற்ற முத்தரப்பு தொடர், டெஸ்ட் மற்றும் டி20 தொடர் என அனைத்திலும் தோல்வி முகத்தை சந்தித்தது.

இதனால் சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுள்ள வங்கதேச அணியின் ஒருநாள் போட்டிகளுக்கான தலைவர் மேர்டசாவை டி20 போட்டிக்கு திரும்புமாறு வங்கதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் Nazmul Hasan கூறுகையில், இலங்கை, இந்தியா மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு தொடர் இலங்கையில் நடைபெறவுள்ளது.

இதற்காக வீரர்கள் தெரிவு செய்யும் கூட்டம் நடைபெற்றது. அப்போது டி20 தொடரிலிருந்து ஓய்வு பெற்றுள்ள மோர்தசா அணிக்கு திரும்பினால், நன்றாக இருக்கும் என்று அணியின் தேர்வாளர்கள் கூறினர்.

ஏனெனில் சமீபகாலமாக சிறப்பாக செயல்பட்டு வந்த வங்கதேச அணி, நடந்து முடிந்த தொடர்களில் மிக மோசமான தோல்விகளை சந்தித்துள்ளது.

அதுமட்டுமின்றி அணியின் சீனியர் வீரர்களான சகிப் அல் ஹசன் போன்றவர்கள் காயம் காரணமாக விலகியுள்ளனர்.

இதனால் அணியை வழிநடத்திச் செல்ல நல்ல அனுபவம் வாய்ந்த வீரர் தேவை என்பதால், அவர் அணிக்கு திரும்ப வேண்டும் என்று எண்ணுகிறோம்.

ஆனால் இந்த விடயத்தில் அவரை கட்டாயப்படுத்தவில்லை, அவர் விருப்பப்பட்டால் மகிழ்ச்சியாக வரவேற்பதாக கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers