இந்திய வீரரை மோசமாக திட்டிய டோனி: வைரலாகும் வீடியோ

Report Print Raju Raju in கிரிக்கெட்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் மனிஷ் பாண்டேவை டோனி களத்தில் திட்டிய வீடியோ வைரலாகியுள்ளது.

குறித்த போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது, இதில் இந்திய வீரர்கள் டோனி, மனிஷ் பாண்டே ஜோடி போட்டு ஆடினார்கள்.

டோனி 28 பந்துகளில் 52 ஓட்டங்கள் எடுத்த நிலையில், மனிஷ் பாண்டே 48 பந்துகளில் 79 ஓட்டங்கள் குவித்தார்.

இந்நிலையில் களத்தில் கூல் கேப்டன் என அழைக்கப்படும் டோனி முதல் முறையாக கோபப்பட்டுள்ளார்.

அதாவது, மனிஷ் பாண்டேவை அவர் ஹிந்தியில் மோசமாக திட்டும் வீடியோ வெளியாகியுள்ளது.

அதில் டோனி பேசியது பாதி கேட்கவில்லை, மீதியை வைத்து அவர் மனிஷ் பண்டேவிடம், அங்கே என்ன பார்த்துட்டு இருக்க? இங்க பாரு? கவனமா இரு என்று கடைசி நேரத்தில் பேசியுள்ளார்.

போட்டிக்கு பின்னர் இது குறித்து பேசிய பாண்டே, களத்தில் டோனி திட்டிய முதல் வீரர் நான் தான், இதை விட பெருமை எனக்கு வேறன்ன இருக்க முடியும் என கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers