பந்தவீச்சாளரின் தலையில் பட்டு சிக்சருக்கு பறந்த பந்து: அதிர்ஷ்டவசமாக தப்பிய வீரர்

Report Print Kabilan in கிரிக்கெட்

நியூசிலாந்தின் உள்ளூர் தொடர் ஒன்றில் துடுப்பாட்ட வீரர் அடித்த பந்து ஒன்று, பந்துவீச்சாளரின் தலையில் பட்டு, எல்லைக்கோட்டுக்கு வெளியில் சென்று விழுந்துள்ளது.

நியூசிலாந்தில் உள்ளூர் அணிகள் பங்கேற்கும் ஒருநாள் தொடர் நடந்து வருகிறது. இந்தத் தொடரின் இறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றுப் போட்டியில், ஆக்லாந்து மற்றும் கேண்டர்பெர்ரி அணிகள் மோதிய போட்டி நடந்தது.

இந்தப் போட்டியில் ஆக்லாந்து முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. போட்டியின் 19வது ஓவரை, கேண்டர்பெர்ரி அணியின் பந்துவீச்சாளர் ஆண்ட்ரூ எல்லி வீசினார்.

அந்த ஓவரை எதிர்கொண்ட ஆக்லாந்து வீரரான ஜீத் ராவல், Straight திசையில் ஒரு பந்தை அடித்துள்ளார். அந்த பந்தானது மின்னல் வேகத்தில் சென்று, பந்துவீச்சாளர் எல்லியின் தலையில் பட்டு எல்லைக் கோட்டுக்கு வெளியில் விழுந்தது.

முதலில் இதனை பவுண்டரியாக அறிவித்த நடுவர், பின்னர் சிக்சர் என மாற்றி அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, அடுத்து உடனடியாக பந்துவீச்சளரின் நிலையை வீரர்களும், நடுவர்களும் சோதனை செய்தனர்.

அதிர்ஷ்டவசமாக ஆண்ட்ரூ எல்லிக்கு, பெரிய அளவில் காயம் எதுவும் ஏற்படவில்லை. மேலும், ஸ்கேன் செய்யப்பட்ட போதும் பெரிய பிரச்சனை எதுவும் இல்லை என்று தெரிந்தது.

சிறிது நேரத்திற்கு பிறகு மைதானத்திற்கு வந்த எல்லி, 4 ஓவர்கள் பந்து வீசினார். அத்துடன் அவர், 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers