இந்திய அணியின் வெற்றியை பறித்தது இதுதான்: தோல்விக்கு பின் பேசிய கோஹ்லி

Report Print Santhan in கிரிக்கெட்

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியின் தோல்விக்கு மோசமான வானிலையே காரணம் என அணித்தலைவர் விராட் கோஹ்லி கூறியுள்ளார்.

இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான இரண்டாவது டி20 போட்டி நேற்று சென்ஞ்சூரியனில் நடைபெற்றது.

இதில் இந்திய அணி 188 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்த போதும், தென் ஆப்பிரிக்கா அணி அசால்ட்டா அந்த இலக்கை எட்டி பிடித்தது.

இந்நிலையில் தோல்விக்கு பின் பேசிய கோஹ்லி, தொடக்கத்தில் நாங்கள் விக்கெட்டுகளை சரிய விட்டுவிட்டோம், இருந்த போதும் ரெய்னா- பாண்டே ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

ரெய்னா வெளியேறிய பின்பு, டோனி- பாண்டே ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது, இதனால் 188 ஓட்டங்கள் எங்களால் எடுக்க முடிந்தது.

இது ஒரு கடினமான இலக்கு தான், வெற்றிக்கான இலக்கு தான் என்று நினைத்தோம், தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக பந்து வீசும் போது ஆட்டத்தின் 12-வது ஓவர் வரை நன்றாகவே இருந்தது.

அதன் பின் வானிலை மிக மோசமாக மாறியது, மழை தூறல் விழுந்தது, இதனால் பந்து வீச்சாளர்கள் பந்து வீசுவதற்கு மிக கடினமாக இருந்தது.

தென்ஆப்பிரிக்கா அணியின் துடுப்பாட்ட வீரர்கள் ஆடுகள தன்மையை பயன்படுத்தி சிறப்பாக ஆடினார்கள்.

கிளாசன், டுமினி துடுப்பாட்டம் மிகவும் சிறப்பாக இருந்தது, வெற்றிக்கு அவர்கள் தகுதியானவர்களே என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers