இலங்கை முத்தரப்பு தொடருக்கான டிக்கெட் விற்பனை தொடக்கம்

Report Print Kabilan in கிரிக்கெட்

இலங்கையில் நடைபெற இருக்கும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடருக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்குகிறது.

இலங்கையில் வருகிற மார்ச் 6ஆம் திகதி இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது.

இந்த தொடருக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்குகிறது, இந்த டிக்கெட்டுகளை, இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைமையகம் மற்றும் R.பிரேமதாசா சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஆகிய இடங்களில், ரசிகர்கள் வாங்கிக் கொள்ளலாம்.

இந்த டிக்கெட்டுகள் ஐந்து தரநிலையின் கீழ் விற்கப்படுகின்றன, குறைந்தபட்ச டிக்கெட்டின் விலை ரூ.300 ஆகவும், அதிகபட்ச டிக்கெட்டின் விலை ரூ.5000 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இறுதிப் போட்டிக்கான டிக்கெட் மட்டும் விற்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers