முத்தரப்பு டி20 தொடர்: 2 முன்னணி இலங்கை வீரர்கள் விளையாட மாட்டார்கள்

Report Print Raju Raju in கிரிக்கெட்

இலங்கையில் நடைபெறவுள்ள முத்தரப்பு டி20 தொடரில் காயம் காரணமாக அசிலா குணரத்னே மற்றும் ஸேஹன் மதுஷங்க ஆகியோர் பங்கேற்க மாட்டார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை, இந்தியா, வங்கதேச அணிகள் பங்குபெறும் முத்தரப்பு டி20 தொடர் கொழும்புவில் மார்ச் 6-ஆம் திகதி தொடங்கி 18-ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்த தொடரில் காயம் காரணமாக இலங்கை அணியின் ஆல்ரவுண்டர் குணரத்னே மற்றும் வேகப்பந்து வீச்சாளர் மதுஷங்க ஆகியோர் விளையாடமாட்டார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

வங்கதேசத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த 2 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இலங்கை அணியில் குணரத்னே இடம்பெற்றிருந்தாலும், தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் விளையாடவில்லை.

அதே போல இரண்டாவது போட்டியில் மதுஷங்கவுக்கு தொடையில் காயம் ஏற்பட்டது.

இதோடு ஏஞ்சலா மேத்யூஸ், துஷ்மந்த சமீரா, நுவன் பிரதீப், குசல் பெரேரா ஆகியோர் விரைவில் நடக்கவுள்ள உடல் தகுதி சோதனையில் தெரிவானால் மட்டுமே அணியில் சேர்க்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers