இவர் இல்லாதது வங்கதேச அணிக்கு பெரிய அடி: திசர பெரேரா

Report Print Santhan in கிரிக்கெட்

வங்கதேச அணியின் ஆல் ரவுண்டரான சகிப் அல் ஹசன் இல்லாதது அந்தணிக்கு பெரிய அடியாக இருக்கும் என்று இலங்கை அணியின் ஆல் ரவுண்டர் திசர பெரேரா கூறியுள்ளார்.

வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி அந்நாட்டு அணியுடன் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ள நிலையில், அடுத்து அந்நாட்டு அணியுடனான டி20 தொடரையும் கைப்பற்றும் முனைப்பில் இலங்கை உள்ளது.

அப்படி அந்த தொடரை இலங்கை அணி கைப்பற்றிவிட்டால், மூன்று தொடரை கைப்பற்றிய அணி என்ற சாதனையை இலங்கை படைக்கும்.

இதற்கு முன்னர் வங்கதேசத்தில் நடைபெற்ற மூத்தரப்பு தொடரையும் இலங்கை அணி கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து இலங்கை அணியின் ஆல் ரவுண்டர் திசர பெரேரா கூறுகையில், இந்த தொடரை கைப்பற்றிவிட்டால் வங்கதேச மண்ணில் மூன்று தொடரை கைப்பற்றியது போன்று ஆகி விடும்.

நான் இங்கு BPL(பங்களாதேஷ் பிரீமியர் லீக்) தொடரில் தொடர்ந்து விளையாடி வருகிறேன், அதனால் எனக்கு நிறைய அனுபவம் கிடைத்திருக்கிறது, கண்டிப்பாக டி20 தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடரைக் கைப்பற்றுவோம்.

முதல் டி20 போட்டியில் வங்கதேச அணியின் ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் காயம் காரணமாக விளையாடவில்லை.

இது அந்தணிக்கு பெரிய அடியாக இருக்கும். அவர் ஆட்டத்தையே மாற்றக் கூடிய திறமை கொண்டவர், அவர் இல்லாதது எங்கள் அணிக்கு தான் சாதகம் என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers