தவானை சொல்லி வைத்து தூக்கிய தென் ஆப்பிரிக்கா வீரர்: டிரஸிங் ரூமில் இருந்து கை தட்டல்

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணியின் துவக்க வீரரான தவானை, வேகப்பந்து வீச்சாளர் ராபாடா சொல்லி வைத்து தூக்கியது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.

இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையே நடந்த ஐந்தாவது ஒருநாள் போட்டியில் இரு அணி வீரர்களும் சற்று ஆக்ரோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர்.

தொடர்ந்து மூன்று ஒருநாள் போட்டிகளில் தோல்வியை சந்தித்த தென் ஆப்பிரிக்கா அணி நான்காவது ஒருநாள் போட்டியின் வெற்றிக்கு பின், இந்திய அணியின் சுழற்பந்து வீச்சை ஒரு கை பார்ப்போம் என்று சபதம் விட்டிருந்தது.

ஆனால் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களிடமே நேற்று சரணடைந்தது. இந்நிலையில் இப்போட்டியின் துவக்க வீரரான தவான் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார்.

இதனால் தென் ஆப்பிரிக்கா வீரர்கள் அவரை முதலில் வெளியேற்றுவதிலே கவனமாக இருந்தனர். அதன் படி தென் ஆப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர ராபாட ஐந்தாவது ஒருநாள் போட்டியின் 7-வது ஓவரின் போது லெக் திசையில் இரண்டு பீல்டர்களை நிறுத்தி பந்து வீசினார்.

பந்தை எதிர்கொண்ட தவானோ லெக் திசையில் அடித்து ஆட, அவர் நினைத்தது போன்றே அங்கு நின்றுகொண்டிருந்த பீல்டர் கையில் பந்து விழுந்தது. உடனே ரபாட குட் பை என்று செய்கை காட்டி வெளியில் அனுப்பினார்.

அவரின் இந்த திட்டம் உடனடியாக கை கூடியதால், டிரஸிங் ரூமில் இருந்த தென் ஆப்பிரிக்கா வீரர்கள் கை தட்டி உற்சாகப்படுத்தினர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers