இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமான பாண்ட்யா: திருப்புமுனை ஏற்படுத்திய ரன் அவுட்

Report Print Santhan in கிரிக்கெட்

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் ஆம்லாவை, பாண்ட்யா தன்னுடைய துல்லியமான துரோவின் மூலம் ரன் அவுட் ஆக்கியதே இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்று தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

இந்திய மண்ணில் மட்டுமல்ல, வெளிநாட்டு மண்ணிலும் நாங்கள் சாதிப்போம் என்று கோஹ்லி படை நிரூபித்துள்ளது.

இந்நிலையில் நேற்றைய போட்டியில் இந்திய அணிக்கு பெரும் தலைவலியாக இருந்தவர் என்றால் துவக்க வீரர் ஹசிம் ஆம்லாவை கூறலாம்.

ஏனெனில் வந்த வீரர்கள் எல்லாம் வந்த வேகத்தில் பெளலியன் திரும்பினாலும், அவர் மட்டும் தனி ஒரு ஆளாக போராடிக் கொண்டிருந்தார்.

இப்படி தனி ஒரு ஆளாக பல போட்டிகளுக்கு வெற்றிகளை ஆம்லா தேடித் தந்துள்ளதால், இந்திய அணியினர் சற்று கலக்கத்தில் இருந்தனர்.

அப்போது 71 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆம்லா ரன் ஓட முயற்சித்த போது, அற்புதமாக பீல்டிங் செய்த பாண்ட்யா தன்னுடைய துல்லியமான த்ரோவால் ரன் அவுட் செய்தார்.

இதைக் கண்ட தென் ஆப்பிரிக்கா அணியினர் தலையில் கை வைத்தனர்.

கோஹ்லி துள்ளிக் குதித்து கொண்டாடினார், அதன் பின் தென் ஆப்பிரிக்கா அணி ஆல் அவுட்டாகியது.

பேட்டிங்கில் என்ன தான் பாண்ட்யா சொதப்பினாலும், பீல்டிங் மற்றும் பந்து வீச்சில் தன்னுடைய திறமையை தென் ஆப்பிரிக்கா மண்ணில் நிரூபித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்