டோனி தலைமையில் விளையாடுவது பெருமை: அவுஸ்திரேலிய வீரர் புகழாரம்

Report Print Raju Raju in கிரிக்கெட்

ஐபிஎல் போட்டியில் சென்னை அணியில் டோனி தலைமையின் கீழ் விளையாடுவது பெருமை என அவுஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன் கூறியுள்ளார்.

ஐபிஎல் 11-வது சீசனில் விளையாடும் அணிக்கான வீரர்களை ஏலம் எடுக்கும் நிகழ்வு சமீபத்தில் நடந்து முடிந்தது.

இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அவுஸ்திரேலியாவின் ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

இது குறித்து வாட்சன் கூறுகையில், சென்னை அணிக்காக விளையாடுவது மகிழ்ச்சியாக உள்ளது.

டோனி போன்ற சிறந்த வீரரின் கீழ் விளையாடுவதை நினைத்தால் பெருமையாக உள்ளதோடு, தொடரை ஆவலோடு எதிர்நோக்கியுள்ளேன் என கூறியுள்ளார்.


மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்