டோனியின் செய்கையால் முடிவை மாற்றிய கோஹ்லி: வைரலாகும் வீடியோ

Report Print Kabilan in கிரிக்கெட்

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியின் போது, ஆம்லாவின் விக்கெட்டிற்காக கோஹ்லி ‘Review’ கேட்க முயன்ற போது, வேண்டாம் என டோனி தலையசைத்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

ஜோகன்ஸ்பர்க்கில் நடைபெற்ற 4வது ஒருநாள் போட்டியில், ஆம்லா துடுப்பாட்டம் செய்ய இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா பந்து வீசினார்.

அவர் வீசிய பந்து, ஆம்லாவின் கால் வழியாக சென்றது. ஆனால், Bat-யில் பந்து பட்டது போன்று சத்தம் கேட்டதால், ரோஹித் சர்மா ‘Review' கேட்கக் கூறி கோஹ்லியிடம் கூறியுள்ளார்.

கோஹ்லியும் ‘Review' கேட்க முடிவு செய்தார். ஆனால், விக்கெட் கீப்பிங்கில் ஈடுபட்டிருந்த டோனி, வேண்டாம் என்பது போல் தலையை ஆட்டினார். இதனைப் பார்த்த கோஹ்லி, ‘Review' கேட்காமல் சென்றுள்ளார்.

இந்த நிகழ்விற்குப் பிறகு, பந்து Bat-யில் பட்டதா என்று சோதனை செய்து பார்த்தபோது, பந்து Bat-யில் படவில்லை என்பது தெரியவந்தது. தற்போது இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

மேலும், ‘Review' கேட்பதில் டோனிக்கு நிகர் அவர் மட்டுமே என்று, நெட்டிசன்கள் அவரைப் புகழ்ந்து வருகின்றனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்