வெற்றியின் போது அதிக சதம் விளாசிய வீரர் யார் தெரியுமா?

Report Print Arbin Arbin in கிரிக்கெட்
550Shares
550Shares
ibctamil.com

அணியின் வெற்றியின் போது அதிக சதம் விளாசிய வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் தனது 100வது போட்டியில் சதம் விளாசிய தவானின் சாதனை சதம் வீணானது.

இருப்பினும் அணியின் வெற்றிக்கு எந்த வீரர்களின் சதம் பேருதவியாக இருந்தது என்ற பட்டியலில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் முதலிடத்தில் உள்ளார்.

சர்வதேச அரங்கில் ஜாம்பவானாக திகழ்ந்த சச்சின் இந்திய அணியின் வெற்றியின் போது அதிகபட்சமாக 33 சதம் விளாசியுள்ளார்.

இரண்டாவது இடத்தில் இந்திய அணியின் தற்போதைய அணித்தலைவர் ஆக்ரோஷ மன்னன் கோஹ்லி உள்ளார்.

இவர் இந்திய அணியின் வெற்றியின் போது 29 சதம் விளாசியுள்ளார்.

3-வது இடத்தில் சர்வதேச அளவில் சிறந்த அணித்தலைவராக திகழ்ந்த அவுஸ்திரேலிய அணியின் ரிக்கி பாண்டிங் உள்ளார். இவர் 25 சதம் விளாசியுள்ளார்.

4-வது இடத்தில் 24 சதங்களுடன் இலங்கை அணியின் ஜாம்பவான் ஜெயசூர்யா உள்ளார். மட்டுமின்றி தென் ஆப்ரிக்க அணியின் துவக்க வீரர் ஆம்லாவும் 24 சதம் விளாசியுள்ளார்.

5-வது இடத்தில் தென் ஆப்ரிக்க அணியின் நட்சத்திர வீரர் டிவிலியர்ஸ் அணியின் வெற்றியின் போது 21 சதம் விளாசியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்