இந்தியாவின் வெற்றியை பறித்த நோ பால்: திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்

Report Print Athavan in கிரிக்கெட்

முக்கியமான போட்டியில் ஆட்டத்தின் போக்கை மாற்றி அமைக்கும் தருணங்களில் எல்லாம் நோ பால் வீசுவதை இந்திய வீரர்கள் வழக்கமாக வைத்துள்ளனர்.

நேற்றைய இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்கா இஅடையே நடந்த 4வது ஒருநாள் போட்டியில் மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகியுள்ளது.

ஏற்கனவே அஸ்வின் மற்றும் ஹர்திக் பாண்டியா வீசிய நோ பால் காரணமாக வெஸ்ட் இண்டிஸ் உடன் T-20 உலக கிண்ணத்தை பறிகொடுத்தது.

பின்னர் பாகிஸ்தன் உடனான இறுதி போட்டியில் பும்ரா வீசியா நோ பாலினால் சாம்பியன்ஸ் கிண்ணம் பாகிஸ்தான் வசம் சென்றது. நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை வென்றுவிடலாம் எனும் நிலையில் சாஹல் வீசிய நோ பாலினால் அதுவும் தள்ளிபோய் இருக்கிறது.

நேற்றைய போட்டியில் தென்ஆப்பிரிக்கா பேட்டிங் செய்யும்போது மழை குறுக்கீட்டதால், அந்த அணியின் வெற்றிக்கு 28 ஓவரில் 202 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

தென்ஆப்பிரிக்கா அணி ஒரு கட்டத்தில் டி வில்லியர்ஸை இழந்த நிலையில், 18-வது ஓவரின் கடைசி பந்தில் மில்லர் 7 ரன்கள் எடுத்த நிலையில் சாஹல் பந்தில் க்ளீன் போல்டானார். ஆனால் சாஹல் க்ரீஸ்க்கு வெளியே கால் வைத்து பந்து வீசியதால் நோ-பால் ஆனது.

7 ரன்னில் இருந்து தப்பித்த மில்லர், ஹர்திக் பாண்டியாவின் அடுத்த ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி விளாசினார். அத்துடன் 28 பந்தில் 39 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு துணைபுரிந்தார்.

நோ-பாலால் இந்தியாவின் வெற்றி பறிபோனது இது முதன்முறையல்ல. இந்தியாவில் கடந்த 2016-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 2-வது அரையிறுதியில்

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின.

இந்த போட்டியின் 7-வது ஓவரை அஸ்வின் வீசினார். இந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் லென்டில் சிம்மன்ஸ் ஆட்டமிழந்தார். ஆனால் அது நோ-பால் என்பதால் லென்டில் சிம்மன்ஸ் தப்பித்தார். அப்போது 12 பந்தில் 18 ரன்கள் எடுத்திருந்தார். வெஸ்ட் இண்டீஸின் வெற்றிக்கு 13.1 ஓவரில் 144 ரன்கள் தேவைப்பட்டது. மீண்டும் 50 ரன்கள் எடுத்திருக்கும்போது ஹர்திக் பாண்டியா பந்தில் ஆட்டமிழந்தார். அப்போதும் நோ-பால் என்பதால் தப்பித்தார்.

இரண்டு முறை தப்பித்த சிம்மன்ஸ் 51 பந்தில் 7 பவுண்டரி, 5 சிக்சருடன் 82 ரன்கள் குவித்து வெஸ்ட் இண்டீஸ் வெற்றிக்கு துணையாக இருந்து ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் 4-வது ஓவரை பும்ரா வீசினார்.

இந்த ஓவரின் முதல் பந்தில் பாகிஸ்தான் தொடக்க வீரர் பகர் சமான் 3 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட் கீப்பர் டோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

ஆனால் பும்ரா அதை நோ-பால் ஆக வீசியதால் பகர் சமான் தப்பித்தார். பின்னர் 106 பந்தில் 12 பவுண்டரி, 3 சிக்சருடன் 114 ரன்கள் குவித்தார். இவரது சதத்தால் பாகிஸ்தான் 300 ரன்களுக்கு மேல் குவித்து முதன்முறையாக சாம்பியன் கோப்பையையும் கைப்பற்றியது.

இப்படி முக்கியமான போட்டிகளில் நோ-பாலால் இந்தியாவின் வெற்றி பறிபோய் உள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்