தனது 100வது ஒருநாள் போட்டியில் சதம் அடித்து அசத்திய ஷிகர் தவான்

Report Print Athavan in கிரிக்கெட்

தனது 100வது ஒருநாள் போட்டியில் இந்திய தொடக்க ஆட்டகாரர் ஷிகர் தவான் சதம் அடித்து அசத்தியுள்ளார்.

இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்கா இடையேயான 4வது ஒருநாள் போட்டி ஜோகன்ஸ்பெர்க்கில் நடைபெற்று வருகிறது, முதலில் டாஸ் வெற்றி பெற்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

தொடக்க ஆட்டகாரர் ரோகித் சர்மா வழக்கம் போல வந்த வேகத்திலேயே ரபாடா பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார், அவர் 13 பந்துகளில் 5 ஓட்டங்கள் அடித்திருந்தார்.

அடுத்து களமிறங்கிய விராத் கோஹ்லி உடன் ஷிகர் தவான் சேர்ந்து இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சிறப்பாக விளையாடிய விராத் கோஹ்லி 83 பந்துகளில் 75 ஓட்டங்கள் எடுத்து மோரிஸ் பந்தில் ஆட்டமிழந்தார் .

தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷிகர் தவான் தனது 100வது ஒருநாள் போட்டியான இந்த போட்டியில் சதம் விளாசினார், இது அவரது 12வது ஒருநாள் போட்டி சதமாகும்.

33 ஓவர் வரை இந்திய அணி 197-2 ஓட்டங்கள் அடித்து தொடர்ந்து விளையாடி வருகிறது. ஷிகர் தவான் ஆட்டம் இழக்காமல் 100 பந்துகளில் 104 ஓட்டங்களும் அவருடன் ரகானே 5 ஓட்டங்களும் அடித்து தொடர்ந்து விளையாடி வருகின்றனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்