விராட் கோஹ்லியை புகழ்ந்த அப்ரிடி

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லியின் அணுகுமுறை தன்னை கவர்ந்துள்ளதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற ஐஸ் கிரிக்கெட் போட்டியின் இடையே, பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி பேட்டி ஒன்றை அளித்தார்.

அவர் கூறுகையில், ‘தற்போதைய சூழலில் உலகின் தலைசிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக விராட் கோஹ்லி உள்ளார். களத்தில் ஆக்ரோஷமாக செயல்படும் அவரின் அணுகுமுறை, என்னை வெகுவாக கவர்ந்துள்ளது.

எனது தொண்டு நிறுவனத்துக்காக Bat, ஜெர்சி ஆகியவற்றை கோஹ்லி வழங்கி வருகிறார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில், இந்திய அணியின் செயல்பாடு அபாரமாக உள்ளது.

கடந்த காலங்களில், இந்திய அணி வெளிநாட்டு மண்ணில் தடுமாறுவதைதான் பார்த்து இருக்கிறோம். ஆனால், தற்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை, இந்திய அணி வெளிப்படுத்தி வருகிறது’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்