மும்பை அணி எடுக்காதது அதிர்ச்சி இல்லை: மனம் திறந்த மலிங்கா

Report Print Santhan in கிரிக்கெட்

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி தன்னை ஏலத்தில் எடுக்காமல் போனது அதிர்ச்சியை ஏற்படுத்தவில்லை என்று இலங்கை அணியின் பந்து வீச்சாளர் மலிங்கா கூறியுள்ளார்.

இந்தியாவில் நடக்கும் உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடர் இந்தாண்டு 11-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

இந்த தொடர் வரும் ஏப்ரல்- மே மாதங்களில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடி வந்த இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்காவை மும்பை அணி எடுக்காமல், அவரை பந்து வீச்சு ஆலோசகராக நியமித்தது.

இது குறித்து மலிங்கா பேட்டியளிக்கையில், இந்த ஐபிஎல் தொடரில் மும்பை அணி என்னை ஏலத்தில் எடுக்காமல் விட்டதால், நான் அதிர்ச்சியடையவில்லை.

ஏனெனின் மும்பை அணிக்காக கடந்த 10-ஆண்டுகளாக விளையாடியுள்ளேன். என்னுடைய திறமையையும் நிரூபித்துள்ளேன். அவர்களுக்கும் அது தெரியும்.

எனக்கு தற்போது 34 வயதாகிறது, நான் என்னுடைய அடுத்த கட்டத்தை நோக்கி நகர இதுவே சரியான நேரம் என்று கருதுகிறேன்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் நிர்வாகம் என்னை தொடர்பு கொண்டது, அப்போது அந்தணி அவர்களின் திட்டத்தை கூறியது.

என்னை பந்து வீச்சு ஆலோசகராம நியமிப்பதாக கூறினர். இதில் மகிழ்ச்சி தானே தவிர வருத்தப்படுவதற்கு ஒன்றுமில்லை.

அடுத்த மூன்று வருடம் என்னுடைய அனுபவத்தை இளம் வீரர்களுக்கு சொல்லி கொடுப்பேன், என்னுடைய வாழ்க்கையில் புது இன்னிங்ஸ் ஆரம்பித்துள்ளது, கொடுத்த பணியை சிறப்பாக முடிப்பேன் என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்