உடை மாற்றி இறங்கும் தென் ஆப்பிரிக்கா: இந்திய அணியின் வெற்றிக்கு முட்டு கட்டை?

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில், தென் ஆப்பிரிக்கா அணி பிங்க் நிற சீருடையில் களமிறங்குகிறது.

இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான நான்காவது ஒருநாள் போட்டி இன்று நடை ஜோஹான்னஸ்பர்க், வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

முதல் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலையில் உள்ள இந்திய அணி, இன்றைய போட்டியில் வெற்றி பெற்றுவிட்டால் தொடரைக் கைப்பற்றி தென் ஆப்பிரிக்கா மண்ணில் வரலாறு படைக்கும்.

ஆனால் இன்றைய போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி பிங்க் நிற சீருடையில் இறங்கவுள்ளது. மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வுக்காக பிங்க் சீருடையில் இறங்கும் தென் ஆப்பிரிக்கா இந்தச் சீருடையில் இதுவரை ஆடிய 5 போட்டிகளிலும் தோற்றதில்லை.

அதுமட்டுமின்றி பிங்க் நிற உடை என்றால் டிவில்லியர்சுக்கு ஒரே குஷி தான், ஏனெனின் பிங்க நிற சீருடையில் டிவில்லியர்ஸ் பல அதிரடிகளை காட்டியுள்ளார்.

இதைத் தொடர்ந்து இந்த மைதானத்தில் 11 போட்டிகளில் 100.85 என்ற சராசரி வைத்துள்ளார். பிங்க் சீருடையில் இம்மைதானத்தில் 2 சதங்களை அடித்துள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் உலக சாதனை அதிவேக சத சாதனையையும் இதே மைதானத்தில் படைத்துள்ளார் என்பதால் வானவேடிக்கைக்கு வாய்ப்பு இருக்கு, மைதானமும் அதிக ஓட்டங்கள் அடிக்க கூடிய மைதானமாக இருப்பதால் ரசிகர்களுக்கு இது டி20 போட்டி போன்று கூட இருக்க வாய்ப்பிருக்கிறது.

மேலும் தென் ஆப்பிரிக்க அணியில் டிவில்லியர்ஸ், பர்ஹான் பெஹார்டீன் மற்றும் மோர்னி மோர்கெல் ஆகியோர் திரும்புவதால், இந்திய அணியின் வெற்றிக்கு முட்டுக்கட்டை போடவும் வாய்ப்புள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்