தமிழக வீரர்களை புறக்கணிக்கிறாரா கோஹ்லி?

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி தமிழக வீரர்களை புறக்கணிப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணிகளில், முன்னாள் அணித்தலைவர் சவுரவ் கங்குலி உருவாக்கிய அணியே, இந்தியாவிற்கு அடையாளமாக திகழ்ந்தது.

அதன் பின்னர், மகேந்திர சிங் டோனி அதனை மாற்றி, தனக்கு என்று ஒரு அணியை உருவாக்கினார்.

தற்போது, அணித்தலைவராக உள்ள விராட் கோஹ்லியும், தனக்கான இளம் அணியை உருவாக்கி வருகிறார்.

ஆனால், அவர் தமிழக வீரர்களை புறக்கணிப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. குறிப்பாக, அஸ்வினை ஒருநாள் அணியில் இருந்து விலக்கியது சர்ச்சைக்குள்ளானது.

மேலும், டெஸ்ட் போட்டியில் அஸ்வினுக்கு சரியாக ஓவர்கள் கொடுக்காததும், தினேஷ் கார்த்திக்கை களம் இறக்காததும் தமிழக வீரர்களை, கோஹ்லி புறக்கணிப்பதாகவே பார்க்கப்படுகிறது.

அத்துடன் முரளி விஜய்க்கு சில போட்டிகளில் வாய்ப்பு அளிக்கப்படாமல் போனதும் சர்ச்சைக்குள்ளானது. ஆனால், கடந்த 2011யில் இளம் அணியை வைத்து உலகக் கிண்ணத்தை டோனி கைப்பற்றியது போல, கோஹ்லியும் இளம் அணியையே உருவாக்கி வருகிறார்.

எனினும், கடந்த ஆண்டு தமிழக வீரர்கள் பலர், இந்திய அணிக்கு தெரிவு செய்யப்பட்டனர். குறிப்பாக வாஷிங்டன் சுந்தர், விஜய் சங்கர் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைத்தது. இப்போதைய இந்திய அணியில், தமிழக வீரர்கள் தான் அதிகம் உள்ளனர்.

இதேபோல பெங்களூரூ ராயல் சேலஞ்சர்ஸ் அணியிலும் அதிகமான தமிழக வீரர்கள் உள்ளனர். இதன் காரணமாக, எதிர்காலத்தில் இந்திய அணியில் இன்னும் அதிக அளவில் தமிழக வீரர்கள் இடம் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.

கோஹ்லியின் விருப்பம் பெரும்பாலும், பெங்களூரு அணியில் இருந்து அதிக வீரர்களை எடுப்பதாகும். எனவே, வாஷிங்டன் சுந்தர், முருகன் அஷ்வின் என பலர் அணியில் முக்கிய இடத்தை எதிர்காலத்தில் பிடிப்பார்கள் என்று கூறப்படுகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்