ஆஷஸ் தொடரில் சூதாட்டம் நடைபெறவில்லை: ஐசிசி அறிவிப்பு

Report Print Kabilan in கிரிக்கெட்

அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 3வது போட்டியில் சூதாட்டம் நடக்கவில்லை என ஐசிசி அறிக்கை வெளியிட்டுள்ளது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரை அவுஸ்திரேலியா அணி 4-0 என்ற கணக்கில் வென்றது.

இந்த தொடரின் 3வது போட்டியில், அவுஸ்திரேலியா அணி இன்னிங்ஸ் மற்றும் 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்தப் போட்டியில் ‘Match Fixing’ எனும் சூதாட்டம் நடந்ததாக புகார்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி விசாரணை மேற்கொண்டது.

அதன்படி, ஐசிசி நடத்திய விசாரணையின் அறிக்கையை நேற்று வெளியிட்டது. இந்த அறிக்கையில், அவுஸ்திரேலியே மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய 3வது டெஸ்ட் போட்டியில் சூதாட்டம் எதுவும் நடக்கவில்லை.

அதற்கான எந்த ஆதாரமும் இல்லை, இரு அணியைச் சார்ந்த எந்த வீரரும், சூதாட்டத்தில் ஈடுபடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்