ஒரே சதத்தில் ஏழு சாதனைகள் படைத்த விராட் கோஹ்லி

Report Print Athavan in கிரிக்கெட்

கேப்டவுன் நகரில் நேற்று தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் 7 சாதனைகளை ஒரு சேர படைத்து அசத்தியுள்ளார் இந்திய அணி தலைவர் விராத் கோஹ்லி அது பற்றிய தகவல்களை காண்போம்,

தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிராக 160 ஓட்டங்களை குவித்ததால் இதுவரை அந்த அணிக்கு எதிராக அதிக ஓட்டங்களை அடித்தவர் எனும் முன்னாள் அணி தலைவர் சவுரவ் கங்குலியின் 127 ஓட்டங்கள் எனும் சாதனையை முறியடித்துள்ளார்.

  • இந்திய வீரர் ஒருவர் தென் ஆப்ரிக்க மண்ணில் அடித்த அதிகபட்ச ஓட்டமாக சச்சின் டெண்டுல்கர் அடித்த 153 ஓட்டங்கள் தான் முன்னர் இருந்தது அந்த சாதனையும் தகர்த்துள்ளார் கோஹ்லி.
  • 147 இன்னிங்க்ஸ்களில் 11 சதம் அடித்து இந்திய அணிதலைவர்களில் அதிகம் சதம் அடித்தவர் எனும் சவுரவ் கங்குலியின் சாதனையை வெறும் 43 இன்னிங்க்ஸ்களில் அடித்து இந்திய அணிதலைவர்களில் அதிக சதம் அடித்தவராக விராட் கோஹ்லி திகழ்கிறார்.
  • இதுவரை தென் ஆப்ரிக்காவில் நடைபெற்றுள்ள இருதரப்பு ஒரு நாள் தொடரில் அடிக்கப்பட்ட அதிக பட்ச ஓட்டங்களாக 2001-02 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் அடித்த 283 ஓட்டங்களே சாதனையாக இருந்தது. ஆனால் இந்த தோடரில் இன்னும் 3 போட்டிகள் மிஞ்சியுள்ள நிலையில் 318 ஓட்டங்கள் குவித்து பாண்டிங் சாதனையையும் முறியடித்தார் கோஹ்லி.
  • தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 150 ஓட்டங்களுக்கு மேல் அடித்த அணிதலைவராக ரிக்கி பாண்டிங் அடுத்து இரண்டாம் இடத்தில் உள்ளார்.
  • நேற்றய போட்டியின் போது தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராக மட்டும் இதுவரை 1000 ஓட்டங்களை ஒரு நாள் போட்டியில் அடித்துள்ளார்.
  • சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அனைத்து விதமான போட்டியையும் சேர்த்து இதுவரை 55 சதங்கள் அடித்து சச்சின்,ரிக்கி,சங்ககாரா,காலிஸ் ஆகியோருக்கு அடுத்ததாக ஐந்தாவது இடத்தில் உள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்