247 ரன்களுக்கு ஆட்டமிழந்த இந்திய அணி: வெற்றி பெறுமா என்ற ஏக்கத்தில் ரசிகர்கள்!

Report Print Harishan in கிரிக்கெட்

தென்னாப்ரிக்க அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட்டின் இரண்டாம் இன்னிங்ஸில் 247 ரன்களுக்கு இந்திய அணி ஆல்- அவுட் ஆகியுள்ளது.

தென்னாப்ரிக்க அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் 187 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது இந்திய அணி.

அதனைத் தொடர்ந்து களம் இறங்கிய தென்னாப்ரிக்கா, 194 ரன்கள் அடித்து இந்திய அணிக்கு 7 ரன்கள் லீட் வைத்தது.

இந்நிலையில் இரண்டாம் இன்னிங்ஸில் களம் இறங்கிய இந்தியாவின் கே.எல்.ராகுல், புஜாரா ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

57 ரன்கள் மட்டுமே அடித்து 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்த இந்திய அணியின் தொடக்க வீரர் முரளி விஜயுடன் இணைந்த கேப்டன் கோலி நிதானமாக ஆடியதன் மூலம் 43 ரன்கள் அடித்து ஆட்டத்தை சூடேற்றினர்.

இருவரும் தங்களின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்ததால் இந்திய அணியின் நிலைமை மீண்டும் கவலைக்கிடமாக மாறியது.

இதையெடுத்து வந்த ரஹானே, புவனேஷ்வர் குமார், ஷமி உள்ளிட்ட வீரர்களின் சிறப்பான ஆட்டத்தினால் 80.1 ஓவர் முடிவில் 247 ரன்கள் அடித்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது இந்திய அணி.

241 ரன்கள் இலக்குடன் களம் இறங்கியுள்ள தென்னாப்ரிக்கா அணி மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட்டை இழந்து 17 ரன்கள் அடித்துள்ளது.

மேலும் கடந்த இரண்டு போட்டிகளில் இந்திய அணி தோல்வியுற்ற நிலையில் மூன்றாவது போட்டியிலாவது வெற்றி பெறுமா என்ற ஏக்கத்துடன் ரசிகர்கள் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்