மூன்று இறுதிப் போட்டியில் சாதித்துள்ள இலங்கை அணி: வங்கதேசத்தை விரட்டியடிக்குமா?

Report Print Santhan in கிரிக்கெட்

வங்கதேச அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கதேசம், ஜிம்பாப்வே, இலங்கை அணிகள் விளையாடும் முத்தரப்பு தொடர் வங்கதேசத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் ஆரம்பத்தில் சொதப்பிய இலங்கை அணி, அதன் பின் அபாரமாக விளையாடி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

வங்கதேசம்-இலங்கை அணிகள் மோதும் இறுதிப் போட்டி வரும் 27-ஆம் திகதி டாக்கா மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்நிலையில் டாக்கா மைதானத்தில் இதற்குமுன் இலங்கை அணி மூன்று இறுதிப் போட்டிகளில் விளையாடி வெற்றி பெற்றுள்ளது.


அதாவது 2009-ஆம் ஆண்டு வங்கதேச அணியையும், 2010-ஆம் ஆண்டு இந்திய அணியையும் 2014-ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணியையும் வீழ்த்தியுள்ளது.

இதனால் இந்த மைதானம் இலங்கை அணிக்கு ராசியான மைதானம் என்று கருதப்படுவதால், 27-ஆம் திகதி நடைபெறும் இறுதிப்போட்டியில் வங்கதேசத்தை இலங்கை அணி விரட்டியடிக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்