இங்கிலாந்து அணியை வீழ்த்திய அவுஸ்திரேலியா

Report Print Kabilan in கிரிக்கெட்

அடிலெய்டில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில், மூன்று விக்கெட் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளது.

அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி கைப்பற்றியிருந்த நிலையில், இரு அணிகள் மோதும் நான்காவது ஒருநாள் போட்டி இன்று அடிலெய்டில் நடைபெற்றது.

முதலில் துடுப்பாட்டத்தைத் துவங்கிய இங்கிலாந்து அணி, அவுஸ்திரேலியாவின் அபாரமான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தது.

ஒரு கட்டத்தில் 8 ஒட்டங்களுக்கு 5 விக்கெட்டை இழந்திருந்த இங்கிலாந்து, கிரிஸ் வோக்ஸ் மற்றும் மோர்கனின் ஆட்டத்தினால் நல்ல Score-ஐ பயணித்தது.

வோக்ஸ் 78 ஒட்டங்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழக்க, மோர்கன் மற்றும் மொய்ன் அலி ஆகியோர் தலா 33 ஒட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

அதன் பின்னர், டாம் கூரன் மட்டும் 35 ஒட்டங்கள் சேர்க்க, இங்கிலாந்து அணி 44.5 ஒவர்களில் 196 ஒட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அவுஸ்திரேலிய தரப்பில் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளும், ஹேசில்வுட் மற்றும் அண்ட்ரூ டை தலா 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

இதனைத் தொடர்ந்து ஆடிய அவுஸ்திரேலியா அணியில், வார்னர் 13, ஒயிட் 3, ஸ்மித் 4 ஒட்டத்திலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் களம் இறங்கிய ஹெட் அபாரமாக ஆடி அரைசதம் அடித்தார்.

மார்ஷ் 32 ஒட்டத்திலும், மார்கஸ் ஸ்டாயின்ஸ் 14 அவுட் ஆகினர். எனினும், தொடக்க ஆட்டக்காரர் ஹெட் 96 ஒட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

டிம் பெய்ன் 25 ஒட்டங்களுடன் களத்தில் இருக்க, 37 ஒவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 197 ஒட்டங்கள் குவித்து, அவுஸ்திரேலியா 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்