இந்தியாவில் ஆண்டு தோறும் நடைபெற்று வரும் உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடருக்கு இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதிலும் ரசிகர்கள் உள்ளன.
இதனால் தான் இந்த தொடர் தற்போது 10 ஆண்டுகளையும் தாண்டி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் பீவர் இப்போதே துவங்கிவிட்டது. ஏனெனில் இன்னும் மூன்று நாட்களி வீரர்களின் ஏலம், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சென்னை அணிக்கு திரும்பியுள்ள டோனி என்று பல உள்ளன.
இதையடுத்து இந்த வருட ஐபிஎல் ஏலத்தில் நியூசிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரர் காலின் முன்ரோ அதிக விலைக்கு வாங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில் டி20 போட்டிகளில் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். தனது கடைசி ஆறு டி20 போட்டியில் 388 ஓட்டங்கள் குவித்துள்ளார்.
கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்த இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில், 13 பந்துகளில் அரைசதம் அடித்திருக்கும் இவர் ஐபிஎல் தொடரில் இதுவரை 4 போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார்.
ஆனால் தற்போது டி20 உலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வருவதால், இம்மாதம் பெங்களூருவில் நடக்கவுள்ள ஐபிஎல் ஏலத்தில் மன்ரோவை ஏலத்தில் எடுக்க போட்டி நிலவும் எனவும், பல கோடிக்கு வாங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.