இலங்கை அணி இதை விட சிறப்பாக ஜெயித்திருக்கலாம்: தினேஷ் சண்டிமால் அதிரடி கருத்து

Report Print Santhan in கிரிக்கெட்
352Shares

வங்கதேசத்தில் நடைபெற்ற முத்தரப்பு தொடரின் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில், இலங்கை அணி சிறப்பாக ஜெயித்திருக்கலாம் என்று அணியின் தலைவர் தினேஷ் சண்டிமால் கூறியுள்ளார்

வங்கதேசம், ஜிம்பாப்வே, இலங்கை அணிகள் விளையாடும் முத்தரப்பு தொடர் வங்கதேசத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் நேற்று நடைபெற்ற வாழ்வா, சாவா போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இலங்கை அணி தொடரில் நீடிக்கிறது.

இருந்த போதிலும் ஜிம்பாப்வே, இலங்கை அணிகளுக்கு வங்கதேச அணியுடன் போட்டிகள் உள்ளதால், அந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும், இல்லை என்றால் ரன் ரேட் அடிப்படையில் தகுதி பெறும்.

இந்நிலையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான வெற்றிக்கு பின்னர் இலங்கை அணியின் தலைவர் தினேஷ் சண்டிமால் கூறுகையில், இப்போட்டியில் இலங்கை அணியின் பந்து வீச்சு சிறப்பாக இருந்தது.

துடுப்பாட்டமும் சிறப்பாக இருந்தது. ஆனால் நடுத்தர துடுப்பாட்ட வீரர்கள் எதிர்பார்த்த அளவிற்கு விளையாடவில்லை, இதனால் அவர்கள் இன்னும் கவனம் செலுத்த வேண்டும்.

மேலும் இந்த போட்டியில் சிறப்பாக வெற்றி பெற்றிருக்க முடியும், ஆனால் முடியவில்லை. இந்த வெற்றி முழுமையான திருப்தி அளிக்கவில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்