இனி ஐபிஎல் போட்டிகள் 8 மணிக்கு கிடையாது: நேரத்தை மாற்றிய ஐபிஎல் நிர்வாகம்

Report Print Harishan in கிரிக்கெட்
338Shares

2018-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் வரும் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ள நிலையில் போட்டிக்கான நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உலகப் புகழ்பெற்ற ஐபிஎல் போட்டிகள் வருடா வருடம் ஏப்ரல், மே மாதங்களில் நடத்தப்படுவது வழக்கம்.

இந்நிலையில் 2018-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 7-ஆம் திகதி தொடங்கப்பட்டு மே 27-ஆம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ஐபிஎல் நிர்வாக கவுன்சில் அறிவித்துள்ளது.

ஏப்ரல் 7-ஆம் திகதி மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கவுள்ள ஐபிஎல் போட்டியின் இறுதி போட்டியும் மும்பையிலேயே நடைபெறவுள்ளது.

இப்போட்டிகளில் பங்கேற்பதற்காக உலகம் முழுவதிலும் உள்ள 1,122 வீரர்கள் தங்களின் பெயர்களை பதிந்துள்ள நிலையில் இறுதி ஏலப்பட்டியலில் 578 வீரர்களின் பெயர் இடம்பெற்றுள்ளது.

அவர்களை ஏலம் மூலம் அணி உரிமையாளர்கள் வாங்கும் நிகழ்வு வரும் ஜனவரி 27 மற்றும் 28-ஆம் திகதிகளில் பெங்களூருவில் நடைபெறவுள்ளது.

மேலும் கடந்த ஆண்டு 8 மணிக்கு தொடங்கிய போட்டிகள் இனி 7 மணிக்கு தொடங்கும் என்றும் 4 மணிக்கு தொடங்கிய போட்டிகள் 5.30 மணிக்கு தொடங்கும் எனவும் ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்