உலக சாதனையை தவறவிட்ட நியூஸிலாந்து வீரர்

Report Print Arbin Arbin in கிரிக்கெட்

நியூஸிலாந்து மண்ணில் பாகிஸ்தான் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இந்தத் தொடரின் முதல் போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற நியூஸிலாந்து அணி பந்துவீச்சைத் தெரிவு செய்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 105 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது.

பின்னர் களமிறங்கிய நியூஸிலாந்து அணி மூன்று விக்கெட்டுகள் இழப்பிற்கு, இலக்கை எட்டி வெற்றிபெற்றது.

நியூஸிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரரும், உலக டி20 தரவரிசையில் முதலிடத்தில் இருப்பவருமான காலின் மன்ரோ, 43 பந்துகளில் 49 ஓட்டங்கள் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தார்.

அவர் கூடுதலாக ஒரு ரன் அடித்திருந்தால் தொடர்ச்சியாக 4 அரை சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்திருப்பார். இதற்கு முன் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கிறிஸ் கெயிலும், நியூஸிலாந்து அணியின் பிரெண்டன் மெக்கல்லமும் இந்த சாதனையைப் படைத்திருந்தனர்.

ஒரே ஒரு ஓட்டத்தில் உலக சாதனையைத் தவறவிட்டாலும், இந்த ஆட்டத்தின் ஆட்ட நாயகன் விருதை காலின் மன்ரோ வென்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...