பாகிஸ்தானை விட இந்தியாவே எங்களுக்கு அதிக உதவிகளை செய்தது: ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம்

Report Print Kabilan in கிரிக்கெட்
319Shares

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமைச் செயல் அதிகாரி Shafiq Stanikzai, கிரிக்கெட் விளையாடுவதற்கு பாகிஸ்தானை விட, இந்திய கிரிக்கெட் வாரியமே தங்களுக்கு பெருமளவில் உதவியதாக தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி சமீபத்தில் டெஸ்ட் அந்தஸ்தை பெற்றது. அதனைத் தொடர்ந்து, இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதன் முறையாக பங்கேற்க உள்ளது.

எனினும், தங்களது அறிமுக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளை பாகிஸ்தானிலேயே விளையாடியது. மேலும், அங்கேயே கிரிக்கெட்டிற்கான பயிற்சிகளை அதிக அளவில் மேற்கொண்டது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமைச் செயல் அதிகாரி கூறுகையில், ‘பிபிசிஐ எங்களுக்கு மகத்தான பங்களிப்பை அளித்துள்ளது.

நாங்கள் இந்தியாவுக்கு வந்ததில் இருந்து, எங்கள் அணியின் ஆட்டத்திறன் மேம்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள சீதோஷ்ண நிலை, எங்களுக்கு உகந்ததாக உள்ளது.

எங்களுக்கு வரவேற்பு கொடுத்து, ஆதரவு அளித்த பிபிசிஐ-யை பாராட்ட வேண்டும். நாங்கள் இந்தியாவுக்கு வந்ததில் இருந்து பெரிய அளவில் சாதித்துள்ளோம்.

பாகிஸ்தானுடன் ஒப்பிடும் போது, இந்திய கிரிக்கெட் வாரியம் எங்களுக்கு நிதியளவில் பெரிய உதவி புரிந்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் விளையாடுவதை விட, இந்தியாவில் விளையாடுவதற்கு ஆகும் செலவு குறைவு.

மேலும், இந்தியாவில் விளையாடுவதற்கு அனுமதி பெறுவது மிகவும் எளிதாக உள்ளது’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்