இந்திய அணியின் மலிங்கா..ஐபில் தொடரில் எடுக்க வாய்ப்பு?

Report Print Santhan in கிரிக்கெட்

இந்தியாவில் நடைபெற்று வரும் சையத் முஸ்தாக் அலி டிராபி தொடரில் ஒரு மலிங்காவை பார்க்க முடிந்ததாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் சையத் முஸ்தாக் அலி டிராபி தொடர் நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் டெல்லி மற்றும் தமிழ்நாடு அணிகள் மோதின. அப்போது டெல்லி அணி துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த போது, தமிழ்நாடு அணி சார்பில் 10-வது ஓவரை அதியசயராஜ் டேவிட்சன், ரிசப் பண்ட்டுக்கு வீசினார்.

அப்போது அவரது பந்து வீச்சு பார்ப்பதற்கு இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான லசித் மலிங்காவைப் போன்றே இருந்தது, அதுமட்டுமின்றி அவரைப் போன்றே யார்க்கரும் வீசி மிரட்டியுள்ளார்.

இது தொடர்பான வீடியோவை இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஸ் சோப்ரா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, இந்திய அணியின் மலிங்கா என்று குறிப்பிட்டுள்ளதுடன், ஐபிஎல் ஹேஷ்டெக்கை குறிப்பிட்டுள்ளார்.

சிறப்பாக பந்து வீசும் இவர் ஐபிஎல் தொடரில் எடுக்க வாய்ப்பு இருப்பதைப் போன்று குறிப்பிட்டுள்ளார். இதே போன்று கடந்த முறை தமிழ்நாட்டைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் நடராஜன், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக 2 கோடிக்கு வாங்கப்பட்டார்.

இவரது பந்து வீச்சு வங்கதேச அணியின் வேகப்பந்து வீச்சாளரான முஸ்தபிசுர் ரஹ்மானைப் போன்று இருக்கும், ஆனால் ஐபிஎல் தொடரில் சொல்லிக் கொள்ளும் படி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்