பார்வையற்றோர் உலக கிண்ணத்தை கைப்பற்றிய இந்தியா

Report Print Kabilan in கிரிக்கெட்

ஷார்ஜாவில் நடந்த பார்வையற்றோருக்கான கிரிக்கெட் உலக கிண்ணத்தை, இந்திய அணி வென்றுள்ளது.

பார்வையற்றோருக்கான கிரிக்கெட் உலக கிண்ணத்தின் இறுதிப் போட்டி, ஷார்ஜாவில் நேற்று நடந்தது. இந்தப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.

40 ஒவர்கள் கொண்ட இந்த போட்டியில், முதலில் துடுப்பாட்டத்தை ஆடிய பாகிஸ்தான் அணி, 40 ஒவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 308 ஒட்டங்கள் குவித்தது.

அந்த அணியில் பாதர் முனிர் 57 ஒட்டங்களும், ரியாசத் கான் 48, அணித் தலைவர் நிசார் அலி 47 ஒட்டங்களும் குவித்தனர்.

இந்திய அணித் தரப்பில் துர்கா ராவ் 3 விக்கெட்களும், பிரகாஷ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

பின்னர் களமிறங்கிய இந்திய அணி, 39 ஒவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு இலக்கினை அடைந்தது. அந்த அணியில் சுனில் ரமேஷ் 93 ஒட்டங்களும், அணித்தலைவர் அஜய் ரெட்டி 63 ஒட்டங்களும் விளாசினர்.

இந்த தொடரில் ஒரு தோல்வியைக் கூட சந்திக்காமல், இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

மேலும், கடந்த ஆண்டு நடந்த பார்வையற்றோர் டி20 உலக கிண்ணத் தொடரின் இறுதி ஆட்டத்தில், இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்