இலங்கை கிரிக்கெட் அணிக்கு கடைசி வாய்ப்பு இது தான்

Report Print Raju Raju in கிரிக்கெட்

வங்கதேசத்தில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இலங்கை கிரிக்கெட் அணி உள்ளது.

இலங்கை, வங்கதேசம், ஜிம்பாப்வே அணிகள் பங்கு பெறும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் வங்கதேசத்தில் நடைபெற்று வருகிறது.

இலங்கை அணி தான் சந்தித்த முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது.

முதல் லீக் போட்டியில் ஜிம்பாப்வே அணியிடம் நூலிழையில் 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி தோல்வியடைந்தது.

இரண்டாவது லீக் போட்டியில் வங்கதேச அணியிடம் 163 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.

இந்நிலையில் இலங்கை - ஜிம்பாப்வே அணிகள் மோதும் போட்டி சற்றுமுன்னர் தொடங்கியுள்ளது.

இதில் நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இலங்கை உள்ளது. ஏனெனில் இப்போட்டியில் வென்றால் மட்டுமே தொடரில் இலங்கை அணி தொடர்ந்து நீடிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்