தென் ஆப்பிரிக்கா தொடரை இழந்த இந்தியா: மீண்டு வர பலே திட்டம்

Report Print Raju Raju in கிரிக்கெட்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் இரண்டு புதிய வேகப்பந்து வீச்சாளர்களை சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட், 6 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகின்றது.

டெஸ்ட் தொடரின் முதல் மற்றும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்து இந்தியா தொடரை இழந்தது.

இந்நிலையில் வரும் 24-ஆம் திகதி தொடங்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற உத்வேகத்துடன் இந்திய வீரர்கள் உள்ளனர்.

இதையடுத்து மும்பை பந்துவீச்சாளர் சர்துல் தாகூர் மற்றும் டெல்லி பந்துவீச்சாளர் நவ்தீப் சைனி ஆகியோர் தென் ஆப்ரிக்காவுக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இந்த இரு வீரர்களுக்கு 3வது டெஸ்ட் போட்டியில் விளையாட வாய்ப்பளிக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்