2018 ஐபிஎல் ஏலத்தில் குதிக்கப் போகும் வீரர்களின் பட்டியல் வெளியானது: விலை எத்தனை கோடி தெரியுமா?

Report Print Santhan in கிரிக்கெட்

இந்தியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் தொடரான ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறவுள்ளது.

இதற்கான ஏலம் பெங்களூரில் வரும் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இந்த ஏலத்தில் பங்கேற்க உலகெங்கிலும் இருந்து சுமார் 1,122 கிரிக்கெட் வீரர்கள் விண்ணப்பித்தனர். இவர்களில் இருந்து சுமார் 578 வீரர்கள் ஏலத்தில் கலந்து கொள்ள தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த பட்டியலில் 16 முன்னணி வீரர்கள் இருக்கிறார்கள். இவர்களில் அனைவரின் அடிப்படை விலை இரண்டு கோடி என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணியின் தலைவர் ஜோ ரூட் முதல் முறையாக ஐபில் ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்துள்ளார்.

மேலும் 32 வீரர்களின் அடிப்படை விலை 1.5 கோடி ரூபாயாகவும், 31 பேரின் அடிப்படை விலை 1 கோடி ரூபாயாகவும், 23 பேரின் அடிப்படை விலை 75 லட்சம் ரூபாயாகவும், 122 பேரின் அடிப்படை விலை 50 லட்சமாகவும், 14 வீரர்களின் அடிப்படை விலை 40 லட்சமாகவும், 17 பேரின் விலை 30 லட்சமாகவும், 303 பேரின் விலை 20 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்