தடையை தகர்த்தெறிந்து தனது மீள்வருகையை உறுதி செய்த பென் ஸ்டோக்!

Report Print Samaran Samaran in கிரிக்கெட்

குற்றச்சாட்டுக்கு மத்தியிலும் இங்கிலாந்து அணியில் இணைத்துக் கொள்ளப்படுவதற்கு பென் ஸ்டாக்ஸுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து கிரிக்கட் சபையில் நேற்று நடைபெற்ற நீண்ட பேச்சுவார்த்தைகளின் பின்னர், அவரை இங்கிலாந்து அணியில் உள்ளடக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற தாக்குதல் சம்பவம் ஒன்று தொடர்பில், பென் ஸ்டாக்ஸ் மற்றும் இரண்டு பேருக்கு எதிராக கடந்த திங்கட் கிழமை குற்றம்சாட்டப்பட்டது.

இதுதொடர்பில் விரைவில் அறிவிக்கப்படவுள்ள தினம் ஒன்றில் அவர்கள் ப்ரிஸ்டல் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகவுள்ளனர்.

எனினும் அவர்கள் அவுஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான கிரிக்கட் தொடர்களில் இங்கிலாந்து சார்பாக விளையாடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து பென் ஸ்டாக்ஸ் தமது மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்