7 ஆண்டுகளுக்கு பின் மீள அழைக்கப்படும் தமிழக கிரிக்கெட் விரர்!

Report Print Samaran Samaran in கிரிக்கெட்

இந்திய மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டுள்ளார்.

தென் ஆபிரிக்க தொடரில் ஏற்கனவே சஹா, மற்றும் பார்த்திப பட்டேல் ஆகியோர் விக்கெட் காப்பாளர்களாக குழாமில் இடம்பெற்றிருந்தனர்.

முதல் போட்டியில் விளையாடிய சஹா உபாதையடைந்துள்ள காரணத்தால், இப்போது இடம்பெற்றுவரும் 2 வது டெஸ்ட் போட்டியில் விக்கெட் காப்பாளராக பார்த்திப பட்டேல் விளையாடி வருகின்றார்.

ஆயினும் அவரது செயல்பாடு அணிக்கு திருப்திகரமாக இல்லாத நிலையில், உபாதையடைந்து தொடரிலிருந்து வெளியேறியுள்ள சஹாவுக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் அழைக்கப்பட்டுள்ளார்.

32 வயதாகும் தினேஷ் கார்த்திக் இந்திய டெஸ்ட் அணிக்கு 14 ஆண்டுகளுக்கு முன்னர் தேர்வாகியிருந்தார், இறுதியாக 2010 ம் ஆண்டு விளையாடியதற்கு பின்னர் இந்திய டெஸ்ட் அணியில் விளையாடவில்லை.

இந்தநிலையில் 7 ஆண்டுகளுக்கு பின்னர் தினேஷ் கார்த்திக் இந்திய டெஸ்ட் குழாமுக்கு அழைக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்