கிரிக்கெட் உலகில் புதிய சாதனையை நிலைநாட்டிய சகீப் அல் ஹசன்!

Report Print Samaran Samaran in கிரிக்கெட்

வங்கதேசத்தின் அனுபவ வீரரும் தற்கால உலக கிரிக்கெட்டின் முதன்மையான சகலதுறைவீரருமான சகீப் அல் ஹசன் டெஸ்ட், ஒருநாள் மற்றும் இருபது இருபது ஆகிய மூன்று போட்டிகளிலும் சேர்த்து பத்தாயிரம் ஓட்டங்களை கடந்துள்ளார்.

வங்கதேச கிரிக்கெட்டை பொறுத்தவரை இது ஒரு பெரிய சாதனையாகும்.

இதுவரை 51 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 3594 ஓட்டங்களையும் 182 ஒருநாள் போட்டிகளில் ஆடி 5184 ஓட்டங்களையும் 61 இருபது இருபது போட்டிகளில் ஆடி 1223 ஓட்டங்களையும் பெற்றுள்ளார்.

அனைத்து போட்டிகளையும் சேர்த்து சேர்த்து 10001 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். அதுமட்டுமல்லாது மொத்தமாக 493 சர்வதேச விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்(டெஸ்ட் -188, ஒருநாள் -232, இருபது இருபது -73).

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்